மீண்டும் ஒரு வன்முறைச்சம்பவம் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத சிலர், தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

3 உந்துருளிகளில் வந்த 6 பேர் கொண்ட குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல்தாரிகள் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், வீட்டில்  இருந்த பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாகவும் காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவரின் வீட்டிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.