தொடருந்து பணிப்புறக்கணிப்பு எதிர் காலத்தில் வேலைக்கு ஆகாது

சிறப்பு கட்டுரைகள் செய்திகள்
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு தொடரூந்து பணிப்புறக்கணிப்பையும் எதிர்க்கொள்ள தேவையான திட்டங்கள் தற்போதைய நிலையில், வகுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குளியாபிடிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் தொடரூந்து பணியாளர்கள் மீண்டும் பணிப்புறக்கணில் ஈடுபட நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேற்கொள்ளும் பணிப்புறக்கணிப்பு 3 அல்லது 6 மாதங்கள் தொடர்ந்தாலும் அதனை சமாளிக்க தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. 

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், தொடரூந்து பணியாளர்களின் கோரிக்கைகள் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.

அவர்களுக்கான தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.