2018 ஆனா சிறந்த விளையாட்டு வீரருக்கான பட்டியலில் மெஸ்சி இல்லை

செய்திகள் விளையாட்டு

ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து சங்கங்களின் யூனியன் சார்பில் 2017-18 சீசனின் சிறந்த வீரரை தேர்வு செய்து விருது வழங்கும். பல வீரர்களை தேர்வு செய்து அதில் இருந்து மூன்று பேரை இறுதியாக தேர்வு செய்வார்கள். இதில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.

கடைசி மூன்று பேரை தேர்வு செய்து இன்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி பெயர் இடம்பெறவில்லை.

யூரோ சாம்பியன்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூகா மோட்ரிச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய லிவர்பூல் அணியின் முகமது சாலாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்முறையாக மூன்று பேர் கொண்ட பட்டியலில் சாலா இடம்பிடித்துள்ளார்.