விளையாட்டு பயிற்றுணர்களுக்கான நியமனங்கள் விரைவில்

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2 விளையாட்டு

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படும் என்று கல்வியமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

விளையாட்டு துறையில் ஆர்வமுள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தலைமை அமைச்சரின் வழிகாட்டலில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேர்முகத்தேர்வு, உடல்தகமை தேர்வு அடிப்படையில் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம் எமது அமைச்சால் வெளியிடப்பட்டிருந்தது.

இருந்தபோதும் சில மாகாணங்களின் அசமந்த போக்கால் மாகாண சபை பாடசாலைகளில் நியமிக்கப்படவுள்ள பயிற்றுவிப்பாளர்களின் பாடசாலை விபரம் இதுரை எமக்கு கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த இழுபறியினால் எதிர்வரும் நாள்களில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அமைச்சரவையின் மேலதிக அங்கீகாரத்துடன் நியமனம் வழங்கப்படும்.

இது கூட்டரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு நியமனம் எனவே எவ்வாறான தடைகள் வந்தாலும் தலைமை அமைச்சர், கல்வி அமைச்சரின் உதவியுடன் இந்த நியமனத்தை நாம் வழங்கியே தீருவோம் என்றார்.

Trending Posts