பெற்றோரின் கவனமின்மையால் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு!

செய்திகள்

அட்டன் ரொத்தர்ஸ் ஆற்றிலிருந்து ஸ்ரீ தரன் சபித் என்ற பெயருடைய நான்கு வயது சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் நேற்று மாலையில் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயிருந்த நிலையில், வீட்டிற்று அருகிலுள்ள ஆற்றில் தவறி வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அயலவர்கள் மற்றும் உறவினர்கள் இணைந்து தேடுதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே குறித்த சிறுவன் குறித்த ஆற்றில் சுமார் 100 மீற்றர் தொலைவில் உயிரிழந்து ஆற்றில் மிதந்து கொண்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெற்றோரின் கவனமின்மையே இதற்கு காரணம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.சிறுவனின் சடலம் நாவலபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.