நேற்று இரவு சாவகச்சேரி ரயிலுடன் மோதி இருவர் உயிர் இளப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

சாவகச்சேரி சங்கத்தானையில் நேற்று இரவு நடந்த தொடருந்து விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மோதி விபத்துக்குள்ளாகினர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 22 வயது மற்றும் 23 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடருந்துக் கடவை சமிக்ஞை விளக்கு எரிந்து கொண்டிருந்தபோது கடவையைக் கடக்க முயன்ற சமயம் விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான இளைஞர் ஒருவரின் உடல் இரு துண்டுகளாகச் சிதைந்துள்ளது. விபத்துத் தொடர்பான விசாரணைகளைச் சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.