நேற்றிரவு விமான நிலையத்தில் நான்கு பெண்கள் கைது!!

செய்திகள்

நேற்று இரவு விமான நிலைய சுங்கப்பிரிவினரால் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 95 இலட்சத்து 71 ஆயிரத்து 320 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரண தொகையுடன் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான பெண்கள் நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு வந்துள்ள போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் பிலியந்தலை , பத்தரமுல்லை , முல்லேரியாவ மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசங்களை சேர்ந்த 46 முதல் 61 வயதுகளுக்கிடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Trending Posts