வன்முறைகளைத் தடுக்க தமிழ் பேசும் அதிகாரிகளை இணைப்பு: டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சட்ட விரோத குழுக்களின் தாக்குதல் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்பில்லாத இளைஞர்கள் கைதாகின்றமையை தவிர்ப்பதற்கு உரிய அவதானம் செலுத்தப்படும் என சட்டம் ஒழுங்குகள் அமைச்சுசஞ்சித் ரதும பண்டார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்ட விரேத குழுக்களின் வன்முறைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று முற்பகல் நாடாளமன்றத்தில் எழுப்பிய கோள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்பாணத்தின் கோப்பாய், மானிப்பாய் மற்றும்  சுண்ணாகம் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா போன்ற சட்டவிரோத குழுக்களால் பல்வேறு வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேலும் இவை தொடர்பில் 38 பேர்கைது செய்யப்பட்டு நீதி மன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சட்ட விரோத செயற்பாடுகளிற்கு பயன்படுத்த நான்கு உந்துருளிகளும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன என்று சட்ட ஒழுங்குகள் அமைச்சர் கூறியுள்ளார்.

குறித்த வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புடையவர்களா? என்பது தொடர்பிலும் இந்த வன்முறைகளின் பின்னணியில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கின்றதா? என்பது தொடர்பிலும் இதுவரையில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் குள்ள மனிதர்களின் நடமாட்டங்கள் இருப்பதாகவும் மற்றும் அதனால் மக்கள் அச்சம் கொண்டிருக்கின்றமையும் தொடர்பில் இதுவரையில்காவற்துரையின் முறைப்பாடுகள் எதுவும் மேற் கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர்கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துகாக நூறிற்கும் அதிகமான விசேட காவற்துறை அலுவலகர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவற்துறையினர்களின் செயற்பாடுகளால் பயனில்லை என்பதனை ஏற்று கொள்ள முடியாது.

மேலும் திறமையாக செயற்படாத கவற்துளை அதிகாரிகள் குறித்த முறைப்படுகள் கிடைத்தால் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதன் போது எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அதிகபடியான தமிழ் பேசும் காவற்துறை அலுவலகர்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Trending Posts