வேதனம் அதிகரிக்கப்பட மாட்டாது – மைத்திரி

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வேதன பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி நிறைவடைந்துள்ளது.

அதன்படி , மேற்கொள்ளவுள்ள எதிர்வரும் நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று பிற்பகல் தமது நிறைவேற்று குழு  கூடவுள்ளதாக தொடரூந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர்  பீ.எம்.பீ. பீரிஸ்  எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது வேதன ஆணைக்குழுவின் தலைவரும் கலந்து கொண்டிருந்தார்.

கடந்த 18ம் திகதி தொடரூந்து தொழிற்சங்கம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட நிலையில் , இதன்போது இன்றைய தினம் மீண்டும் பேச்சவார்த்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையிலேயே , இன்றைய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.