விக்கினேஸ்வரனின் கருத்துக்கு செருப்படிகொடுத்த கூட்டமைப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1
வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நிராகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 27ஆம் திகதி, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது.
முதல் கூட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் அதற்கு அழைக்கப்பட்டிருந்தாலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அதில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இந்தமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அபிவிருத்திக்கு முன்னர் அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு, இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் யாரும் கலந்துக் கொள்ளக் கூடாது என்ற தமது நிலைப்பாட்டை விக்னேஸ்வரன் வலியுறுத்தி இருந்தார்.

இதுதொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவர் கடிதம் ஒன்றையும் அனுப்பி இருந்தார்.

எனினும் இதுதொடர்பில் நேற்று ஒன்றுகூடி ஆராய்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இந்த கோரிக்கையை நிராகரித்திருப்பதுடன், ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பில் அவரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு வினவ முயற்சித்த போது, அவர் வெளிநாடு சென்றிருப்பதாக தொலைப்பேசி குரல்பதிவில் தெரிவிக்கப்பட்டது.
எமது அழைப்பினை எம்.ஏ.சுமந்திரன் ஏற்கவும் இல்லை.