கிளிநொச்சியில் வறட்சியால் பாதிப்பு!

செய்திகள்

தற்போது கிளிநொச்சியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, மாவட்டத்தின் 4 பிரதேச செயலக பிரிவுகளின் 24 ஆயிரத்து 99 குடும்பங்களைச் சேர்ந்த 81 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டாவளை, பச்சிளைப்பள்ளி, கரைச்சி மற்றும் பூனகரி ஆகிய 4 பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த மக்களே பெரும் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மனிதனுடை அன்றாடம் எதிர் கொள்ளும் குடிநீருக்கு பெரும் நெருக்கடி நிலையை மக்கள் எதிர்நோக்கி இருந்தாலும் அங்கு காணப்படும் கிணறுகளும் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதுபோல், தர்மபுரம், புளியம்பொக்கனை, கல்லாறு ஆகிய பிரதேசத்தில் உள்ள கிணறுகள் அனைத்தும் வற்றியுள்ளதால், பொதுமக்கள் தமது அன்றாட கடமைகளை செய்துக்கொள்வதில் கடும் நெருக்கடி நிலையை எதிநோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.