வாக்கேடுப்பு இன்று மாலை ஆரம்பம் …….

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பொன்றை நடாத்த கட்சித்தலைவர்கள் இன்று பிற்பகல் தீர்மானித்துள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய நாடாளுமன்ற விவாதம் இன்று முற்பகல் 11.50 ஆரம்பமான நிலையில் , இதன் போது பிற்பகல் இடம்பெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கட்சித்தலைவர்களின் தீர்மானத்தின் பேரில் இன்று பிற்பகல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக சபைத்தலைவர் லக்‌ஷமன் கிரிஹெல்ல தெரிவித்துள்ளார்.