மீண்டும் கோலி முதல் இடத்தில்

சிறப்பு கட்டுரைகள் செய்திகள் விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேரியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இரண்டு இன்னிங்சுக்களிலும் 200 ஓட்டங்களை பெற்றமையை அடுத்தே அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கோலி ஏற்கனவே முதலிடத்தை பிடித்திருந்தார்.

எனினும் 2வது டெஸ்ட் போட்டியில் குறிப்பிடத்தக்க ஓட்டங்களை பெறாத நிலையில், 2வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், 937 புள்ளிகளுடன் மீண்டும் முன்னிலையில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் அவுஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணி தலைவர் கேன் வில்லியம்சன் உள்ளார்.

இலங்கை அணி வீரர்களான திமுத் கருணாரத்னே மற்றும் தினேஸ் சந்திமல் ஆகியோர், முறையே 7ஆம் மற்றும் 8ஆம் இடங்களில் உள்ளனர்.