யாழ்ப்பாணத்தில் 38 ஜோடிகளுக்கு இலவச பதிவு திருமணம்!!

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சட்டரீதியாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய 38 ஜோடிக்கு பதிவு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

கடந்த 3 நாட்களில் அரசாங்க செலவில் திருமணம் நடத்தி வைப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிநடத்தலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை சண்டிலிப்பாய் பிரதேசத்திலும், சனிக்கிழமை உடுவில் பிரதேசத்திலும், மகரவெட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட செயற்பாட்டில் இந்த ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.