வடக்கு இனவாத அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை: பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

செய்திகள்

இனவாத ரீதியான செயற்படும் சில வடக்கு அரசியல்வாதிகள் அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்பட்சத்தில், அவர்களுக்கு எதிராக உறுதியான சில தீர்மானங்கள் மேற்கொள்ள நேரிடும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் கம்பஹ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஊடகங்கவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைகுறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை அகற்றுவதற்கு எந்த தீர்மானங்களும் இல்லை.அதற்கான எந்தவித முன்னெடுப்புக்களும் இல்லைஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள இனவாதத்தை அடிப்படையாக கொண்டு செயற்படும் சில அரசியல்வாதிகளே இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

மேலும் விடுதலைப்புலிகளை மீள கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் மற்றும் இனவாத ரீதியான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தீர்க்க முடியாத ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், அது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.