விக்னேஸ்வரனின் கருத்தைக்கேட்காத கூட்டமைப்பு இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தில்

சிறப்பு கட்டுரைகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பங்குகொள்வார்கள் என கூட்டமைப்பு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவருக்கு, வடக்கு முதல்வர் கோரியிருந்தார்.

எனினும் அதனை கூட்டமைப்பு நிராகரித்திருந்த நிலையில், இன்றை கூட்டத்தில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் பங்குகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இன்றைய தினம் இடம்பெறவுள்ள அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருதங்கேணியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டார்.