புகையிரத சேவை என்னும் அரசா சேவையில் இருந்து மாறவில்லை ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர்

சிறப்பு கட்டுரைகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் ரயில் சேவை சலுகை சேவையாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இதிகொல தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்தின் நாளாந்த வருமானம் ஒரு கோடி 77 இலட்சம் ரூபாவாகும். ஆனால் நாளாந்த செலவினம் மூன்று கோடி 50 இலட்சம் ரூபாவை தாண்டுவதாக அவர் கூறினார். ரயில்வே திணைக்களத்தில் 17 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

ரயில்வே கட்டணம் இறுதியாக 2008ம் ஆண்டு அதிகரிக்கப்பட்டது. புதிய கட்டண திருத்தத்திற்கு அமைய ஆரம்ப கட்டணமான பத்து ரூபாவில் மாற்றங்கள் இடம்பெற மாட்டாது. ஆனால் ஆரம்ப கட்டணத்தில் பயணிக்க கூடிய தூரம் பத்து கிலோமீற்றர்களிலிருந்து ஏழு கிலோமீற்றர்கள் வரை குறைக்கப்படவுள்ளது. புதிய திருத்தத்திற்கு அமைய வழமையான கட்டணம் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதோடு முதலாம், இரண்டாம் வகுப்பு ஆசனங்களுக்கான கட்டணம் 20 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

சீஷன் எனப்படும் மாதாந்த பருவச்சீட்டுக்காக வழங்கப்படும் கட்டண சலுகையில் எந்த மாற்றமும் இடம்பெற மாட்டாது. கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது.