ஜனாதி பதியுடன் தமிழ் தலைமைகளின் சந்திப்பு

சிறப்பு கட்டுரைகள் செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகனை முன்னெடுக்கின்றபோது, வடக்கு கிழக்கிற்கும் அதன் பயனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நேற்றைய இரண்டாவது கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அந்த மாகாணங்களின் அபிவிருத்திப் பணிக்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச பணியாளர்களின் பங்களிப்பினை எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கின் அடிப்படை வசதிகள் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மாத்திரமல்லாது, வாழ்வாதார அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் பணிகளும் நெறிப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •