நாளையதினம் அனுஷ்டிக்கப்படவுள்ள பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்
நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விஷேட நிகழ்வொன்றை ஒழுங்கு செய்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட பேரணி தாமரை தடாக சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி ஜே.ஆர். ஜயவர்த்தன கேந்திர நிலையம் வரை முன்னெடுக்கவுள்ளது.

இந்த நிகழ்வின் போது விஷேட உரைகளும் நிகழ்த்தப்படவுள்ளன.

இந்த நிகழ்வின் விஷேட அதிதிகளாக காணாமல் போனோரின் உறவினர்கள், பொது அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.

Trending Posts