பட்டதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைய போட்டிப் பரீட்சை

செய்திகள்

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 2ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் கொழும்பு நகரில் 6பரீட்சை மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த போட்டிப் பரீட்சை நடத்தப்படுகின்றது.மேலும், இந்தப் பரீட்சை ஏற்கனவே கடந்த 27ஆம் திகதி நடத்த ஏற்பாடாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.