பொது செயலாளர் பதவியிலிருந்து விலகினார் :ஆறுமுகம் தொண்டமான்

செய்திகள்

இலங்கை தொழிலாளர் காங்கிரஜின் நிர்வாக சபை மற்றும்தேசியசபை ஒன்று கூடல் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று  இடம்பெற்றது.

இதன் போதே தேசியசபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் மேற் கொள்ளப்பட்டது.

இந்தவகையில் இதுவரை காலமும் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவிவகித்த ஆறமுகம் தொண்டமான் இன்று முதல் தலைவராக மாத்திரம் செயற்படவுள்ளார்.

அத்தோடு புதிய செயலாளராக அனுசியா சிவராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமானும் உபதலைவராக பதுளை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.