யாழ்பாணம் உட்பட 11 மாவட்டங்கள் வரட்சியால் பாதிப்பு!

செய்திகள்

வரட்சியான காலநிலை காரணமாக 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் குருநகல், பொலனறுவை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார்,அம்பாறை, திருகோணமலை,மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தொடர்ந்தும் மழையற்ற வானிலை நிலவக் கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Trending Posts