கொடிகாமத்தில் விபத்து – ஒருவர் பலி

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 1

இரு சக்கர உழவு இயந்திரத்தை அதே திசையில் சென்ற ஹையஸ் வாகனம் மோதியதில் லான்ட் மாஸ்டரில் பயணித்த முதியவர் சாவடைந்தார் .உதவியாளர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணம் கொடிகாமம் இராமாவில் பகுதியில் முதன்மைச் சாலையில் இடம்பெற்றது.

சரசாலையைச் சேர்ந்த வியாபார நோக்கத்துடன் இரு சக்கர உழவு இயந்திரத்தில் பளை நோக்கிச் சென்றுள்ளனர். வாகனம் கொடிகாமத்தை நோக்கிச் சென்ற வேளையில் அதே திசையில் வேகமாக வந்த ஹையஸ் வாகனம் லான்ட்மாஸ்டர் வாகனத்தை மோதி அடுத்த காணிக்குள் சென்றதில் இரு வாகனங்களும் சேதமடைந்தது.

இரு சக்கர உழவு இயந்திரத்தில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்தில் சாவடைந்தார். இன்னொருவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.