சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி!

செய்திகள்

அனர்த்த நிலமைகளை முகம்கொடுப்பதற்கு தயாராகும் வகையில், 28 நாடுகளில் இன்றையதினம் சுனாமி முன்னெச்சரிக்கை பயிற்சி நடைபெறவுள்ளது.

இதன்படி இலங்கையில் முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் காலி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இந்த அனர்த்த முன்னெச்சரிக்கை பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப் பற்றி, அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் மற்றும் காலி மாவட்டத்தின் ஹிக்கடுவை ஆகிய இடங்களிலும் காலை 8.30க்கு இந்த முன்னெச்சரிக்கை பயிற்சி இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும், அதுகுறித்த எச்சரிக்கையை எவ்வாறு புரிந்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகள் இதன்கீழ் வழங்கப்படவுள்ளன.

இது குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.