மகிந்தாவின் போராட்டத்துக்கு நேர்ந்த கேதி

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 1
ஒன்றிணைந்த எதிரணி கொழும்பில் நடத்திய சத்தியாகிரக போராட்டம் இன்று அதிகாலை 1.15 அளவில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இந்த சத்தியாகிரகம் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் மகிந்தாநந்த அழுத்கமகே ஆகியோர், போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் செய்து, போராட்டம் நிறைவடைந்துள்ளதாக அறிவித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேரணியாக வந்தவர்கள், கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டம் அருகில் ஒன்று கூடினர்.
இந்த போராட்டம் நடத்தப்படும் இடம் முன்கூட்டியே தெரிவிக்கப்படாமையினால் கொழும்பில் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன் இதில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழுவும் இதில் கலந்து கொண்டிருந்தது.
சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நேற்று இரவு முழுவதும் லோட்டஸ் சுற்றுவட்டம் அருகில் பாடல்களைப் பாடிக் கொண்டு தங்கி இருந்தனர்.
இதேவேளை, இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த ஒருவர் மாரடைப்பின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், போராட்டத்தின் போது பக்கற் பாலை பருகிய 30 பேர் கொழும்ப தேசிய வைத்தியசாலையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் அவர்கள் அனைவரும் சிகிச்சையின் பின்னர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணி நேற்று கொழும்பில் நடத்திய சத்தியாகிரக போராட்டம் தோல்வியில் நிறைவடைந்தாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ராஜாங்க அமைச்சர் அஜித் பி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடும் கனவைக் கண்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ஆனால் மதுபானத்தைப் பருகிவிட்ட பலர் வீதிகளில் படுத்துக் கிடந்தனர்.
இந்திய நோயாளர் காவுகை வண்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை இறுதியில் அதே காவுகை வண்டிகளில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நேர்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இந்த போராட்டம் தொடர்பில் அமைச்சர் மனோகணேசன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.