யாழ்ப்பணத்தில் மீண்டும் வள்வெட்டு ! அட்டகாசம் ஆரம்பம்

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை குறித்த பகுதிக்குள் பிரவேசித்த வாள் வெட்டு குழுவினர், முதல் அமைந்துள்ள வீட்டுக்குள் புகுந்து குடும்ப பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி பொருட்களை சேதப்படுத்தியுள்ளதுடன், இரண்டாவது வீட்டிற்குள் புகுந்தவர்கள் அவ்வீட்டில் வசித்த தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தியதோடு, பொருட்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பிரிதொரு வீட்டிற்குள்ளும் பிரவேசித்து வீட்டில் எவரும் இல்லாத நிலையில் பொருட்களை மாத்திரம் சேதபடுத்திவிட்டு சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை நடத்திய வாள்வெட்டு குழுவினர் தலைமறைவாகியுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.