காரைநகரில் திருட்டில் ஈடுபட்ட கும்பல் பொதுமக்களால் மடக்கி பிடிப்பு!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்,மார்ச் 17

ஊர் காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர்  கோவளம் பகுதியில் இன்று மாலை திருட்டில் ஈடுபட்ட ஐவர் அடங்கிய கும்பல் ஒன்று அப்பகுதி  மக்களால் மடக்கி  பிடிக்கப்பட்டு நையப் புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

சுழிபுரம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த ஐவர் அடங்கிய இளைஞர் குழு ஒன்று என்று காரைநகர் கோவளபகுதியில் உள்ள வீடுகளில் உள்ள வீட்டு நிலைகளை  திருடிய சந்தர்ப்பத்தில் அப்பகுதிமக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்

காரைநகர் மணற்காடு அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இன்றைய தினம் கோவளப்பகுதி மக்களின் திருவிழா இடம்பெறுகின்ற நிலையில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது

பிடிக்கப்பட்டவர்களில்   ஒருவர் காரைநகர்  பகுதியை சேர்ந்தவர் என  தெரிவிக்கப்படுகிறது