விரைவில் புதிய அரசியல் யாப்பின் வரைபு!

செய்திகள்

புதிய அரசியல் யாப்பின் வரைபு விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என நாடாளமன்றத்தின் சபை முதல் அமைச்சர் லஹ்மன் கிரிஎல தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு சீரமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்து அறியும் குழு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் உதயஹமன்பொல கேள்வி எழுப்பினார்.

மேலும் இதற்கு பதில் வழங்கும் போது குறித்த வரைபு தொடர்பில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் விவாதம் நடைபெறும் என்றும் லஹ்மன் ஹிரிஎல தெரிவித்துள்ளார்.