12,500 ஆசிரிய இடமாற்றங்கள் இரத்து செய்யப்படும்?

முக்கிய செய்திகள் 2

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் இடமாற்றச் சபையின் பரிந்துரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இந்த ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்துச் செய்யப்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்தியதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

போக்குவரத்துப் பிரச்சினைகள், அதிக செலவுகள் உள்ளிட்ட பல மனிதாபிமான பிரச்சினைகளின் அடிப்படையில் ஆசிரியர்களின் இடமாற்றத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறும் அல்லது நிவாரணம் வழங்குமாறும் கோரி ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Posts