புதிய தேர்தல் முறைக்கு அமைச்சர் ஹக்கீம் எதிர்ப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

புதிய தேர்தல் முறைக்கு தான் ஒருபோதும் இணங்கப் போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ள அதேவேளை, எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் சிறுபான்மையினருக்கு நியாயம் வழங்கப்படாமை தொடர்பில் தான் கடும் எதிர்ப்பு வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.