காணாமல்போனோர் போராட்ட பணம் கொடுத்தால் சரி ஆகும்

சிறப்புச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

தாங்கள் நடத்திய ஆய்வுகளின் படி, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் முகம் கொடுத்துள்ள பிரதான பிரச்சினையாக வறியநிலை நிலவுகின்றது என, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் முகம் கொடுத்துள்ள சமுக –பொருளாதார பின்தங்கிய நிலைமையின் காரணமாக, இந்த விடயத்தில் இறுதி தீர்வு ஒன்று கிடைக்கப்பெறும் வரையில் அவர்களால் தாக்குபிடிக்க முடியாது.

அதன் காரணமாகவே தமது அலுவலகம் இடைக்கால நிவாரணம் குறித்த பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான குடும்பங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களினாலேயே குடும்பத்தின் வாழ்வாதாரம் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளது என்றும் சாலிய பீரிஷ் கூறியுள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •