சதத்துடன் நிறைவுக்குவந்த குக்கின் கிறிக்கேட் வாழ்க்கை

முக்கிய செய்திகள் 2 விளையாட்டு

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் அலைஸ்டர் குக் தனது இறுதி இனிங்சில் சதமடித்து சாதனை புரிந்துள்ளார்.
ஓவலில் இடம்பெறும் இந்தியாவிற்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்தின் இரண்டாவது இனிங்சில் குக் சற்று முன்னர் சதமடித்துள்ளார்.
இதன் மூலம் தனது முதல் டெஸ்டிலும் இறுதி டெஸ்டிலும் சதமடித்த வீரர் பட்டியலில் குக் இணைந்து கொண்டுள்ளார்.

பில்பொன்ஸ்போர்ட், டொன்பிரெட்மன்,கிரேய்க் சப்பல் முகமட் அசாருதீன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
குக் இந்தியாவில் தனது முதல் டெஸ்டில் சதம் பெற்றிருந்தார்.

மேலும் தனது இறுதிப்போட்டியின் முதல் இனிங்சில் அரைசதமும் இரண்டாவது இனிங்ஸில் சதமும் அடித்த வீரர் என்ற சாதனையையும்அவர் நிகழ்த்தியுள்ளார்.

அலைஸ்டர் குக்கின் இறுதி இனிங்ஸில் அவர் சதம் பெறுவதை பார்ப்பதற்காக காத்திருந்த இரசிகர்கள் அவரிற்கு பலத்த கரகோசத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.