இந்து கோயில்களில் :மிருகங்களைப் பலியிடத் தடை!

செய்திகள்

இந்து ஆலயங்களில் மிருக பலி பூஜையை தடை செய்யக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.