தமிழன் யாரும் எனக்கு எதிரியில்லை! – மகிந்த ராஜபக்ஸ

சிறப்புச் செய்திகள் செய்திகள்
இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற விராட் ஹிந்துஸ்தான் சங்க கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில் எந்த தருணத்திலும் இனரீதியான யுத்தம் இடம்பெறவில்லை.
தமிழ் சமுகத்துக்கு எதிராக இராணுவம் யுத்தம் நடத்தவில்லை.
 விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாடு இலங்கையில் மாத்திரம் அல்லாமல் இந்தியாவிலும் பரவி இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்லாமல் விட்டிருந்தால், அடுத்த தலைமைக்கு செய்யும் காட்டிக் கொடுப்பாக அமைந்திருக்கும் என்றும் மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகின்றமை உண்மையானது இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் உட்பட 8 ஆயிரம் பேர்வரையிலேயே இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.