4:1 என்ற வாக்குறுதியினை காப்பாற்றிய இங்கிலாந்து அணி

செய்திகள் விளையாட்டு
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
முன்னாள் அணித் தலைவர் அலஸ்டயார் குக்கின் இறுதி சர்வதேச போட்டியாக அமைந்த இந்த போட்டியில், இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 332 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்ஸில் 423 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.
இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 292 ஓட்டங்களைப் பெற்றதுடன், 464 என்ற வெற்றி இலக்குடன் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடியது.
எனினும் சகல விக்கட்டுகளையும் இழந்து 345 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி 4க்கு1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.