சிகை அலங்காரத்தில் இலங்கை முதலிடம்

செய்திகள் பிந்திய செய்திகள் விளையாட்டு

சர்வதேச சிகையலங்காரப் போட்டியொன்றில் இலங்கையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் கயல்விழி ஜெயபிரகாஷ் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் கயல்விழி அழகுக் கலை துறையில் மிகவும் பிரசித்தி பெற்றவர் என்பதுடன், அவர் பல்வேறுபட்ட சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் குறித்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கயல்விழிக்கு வெற்றிக்கான பரிசு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை சார்பில் பங்கேற்ற அவரின் இந்த சாதனைக்கான அடையாளமாக வெள்ளிப்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •