மகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்

இந்தியச் செய்திகள் செய்திகள்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன்மோகன் சிங் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பினை ஏற்று டில்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Trending Posts