முல்லைத்தீவினை பிக்குகளிடம் இருந்து விடுவித்த நீதிமன்றம்.

சிறப்புச் செய்திகள் செய்திகள்

முல்லைத்தீவு – குருந்தூர் மலை பகுதியில் பாரம்பரிய வழிப்பாடுகளில் ஈடுபட்டு வந்த மக்கள் அங்கு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அண்மையில் குறித்த பகுதியில் பிக்குமார்கள் உள்ளிட்ட சிலர் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த நிலையில், அங்குள்ள மக்கள் கூடி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர்.

இந்தநிலையில், இது குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.

நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குறித்த பிக்குமார்கள் உள்ளிட்டவர்களுக்கு அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது எனவும் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

அத்துடன், அவர்களை போன்ற சதாரண நபர்களை ஆய்வுகளில் ஈடுபடுமாறு பணிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.