வரட்சியால் வாடிய பள்ளி மாணவர்கள்!

செய்திகள்

வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதனால் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு கிணற்றிலிருந்து வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலை காரணமாக வற்றிப்போயுள்ளது.

இதையடுத்து மாணவர்களுக்கு குடிநீர் உட்பட ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தவதற்கு தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாடசாலையின் அதிபர் த.அமிர்தலிங்கத்தை இவ் விடயம் தொர்பாக வினாவிய போது, தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு தற்போது கிணற்றில் தண்ணீர் வற்றிப்போயுள்ளது.

எனினும் மாற்றுவழிகள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்குத் தட்டுப்பாடுகள் இன்றி நேற்று முதல் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு குடிநீருக்கான தட்டுப்பாடுகள் ஏற்படவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார்.