யாழிலும் மற்றும் கொழும்பிலும் வெப்பநிலை அதிகரிப்பு!

செய்திகள்

யாழ்ப்பாணம், மற்றும் கொழும்பு மாவட்டங்களில் வழமையான வெப்பநிலையை விட 5 பாகை செல்சியஸால் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குருநாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 5 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதுடன் கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களின் வெப்பநிலை 2.4 பாகை செல்சியஸினால் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வறட்சி காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.