வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு தீர்வு வேண்டும்: வாசுதேவ

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்த மூவாயிரத்திற்கும் அதிகமான அரச சேவையாளர்களுக்கு வேதனம் தொடர்பில் தீர்வொன்றினை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தேர்தல் ஆனைக்குழுவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவாவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் காமினி வலேபொட ஆகியோர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு குறித்த கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் வேதனம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.