மீண்டும் விஜயகாவுக்கு எதிரியாக மாறிய வாய்!

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டினால் காணாமல் போனவர்களை இனம் காண முடியும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து விடுதலை புலிகள் அமைப்பை மீளுருவாக்க வேண்டும் என தெரிவித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சையில் சிக்கினார்.

இதன் காரணமாக , அவரின் இராஜாங்க அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் , அவருக்கு எதிராக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் , வடக்கில் மூடப்பட்ட கிணறுகளை தோண்டினால் காணாமல் போனவர்களை இனம் காண முடியும் என மீண்டும்  விஜயகலா மகேஸ்வரன் சர்ச்சையை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.