அரசுக்கு தனியர் பேரூந்து சங்கம் கொடுத்து இருக்கும் கோரிகை!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு ஏற்றவகையில் அரசாங்கம் நீதியான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாத பட்சத்தில், அது தொடர்பில் இன்று தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என தனியார் பேருந்து சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அதன் பிரதான செயலாளர் அஞ்ஜன பிரியன்ஜித் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்ச்சியாக எரிபொருளின் விலையை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதற்கான உரிய தீர்வு தமக்கு கிடைக்கவில்லையாயின், அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமது உறுப்பினர்கள் அனைவரையும் கொழும்பிற்கு அழைத்து, அது தொடர்பில் உரிய தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் என அஞ்சன பிரியன்ஜித் குறிப்பிட்டார்.