இலங்கை ஆணி வெளியேறுமா? வெளியேறாதா ?

செய்திகள் பிந்திய செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

ஆசிய கிண்ணத் தொடரின் பி பிரிவின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது.

அபுதாபியில் இடம்பெறும் இன்றைய போட்டி இலங்கை அணி, தொடரில் தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

ஏற்கனவே, நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில், பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை 137 ஓட்டங்களால் வெற்றிக்கொண்டது.

இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தானுடன் இடம்பெறும் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மாத்திரமே இலங்கை அணி சுப்பர் 4 சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பை பெறும்.

இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்து பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் வெற்றிபெறும்பட்சத்தில், நிகர ஓட்ட சராசரியின் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கான இரண்டு அணிகளும் தெரிவுசெய்யப்படும்.

இதேவேளை, இலங்கையில் உள்ள சிறந்த ஒன்பது வீரர்களும் தற்போது அணியில் உள்ளதாகவும், அவர்கள் இந்த தொடருக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக குசல் மெண்டிஸ் களமிறக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டார்.

திலான் சமரவீர மேலும் குறிப்பிடுகையில், வீரர்களின் திறமையில் எவ்வித குறைபாடுகளும் இல்லை எனவும் அவர்களின் மனோ வலிமையே அதிகரிக்க வேண்டும் என தெரிவித்த அவர் பங்களாதேஸூடன் இடம்பெற்ற போட்டியின் போது ஏற்பட்ட அழுத்தம் காரணமாக வீரர்கள் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பயத்தில் காணப்பட்டதாக தெரிவித்தார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •