கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு

முக்கிய செய்திகள் 3

நியாயமான சுமை-பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் பிணையெடுப்புக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நேற்று இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் (Wang Wenbin) இதனைத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி, கடன் பிரச்சினைகளை விரைவாகவும் திறம்படமாகவும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு நிதியுதவி ஆதரவு ஆவணங்களை வழங்கியுள்னது.

தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது.

இலங்கையின் நிலைமையை வழிநடத்துவதற்கும், அதன் கடன் சுமையைத் தளர்த்துவதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைய உதவுவதற்கும் தொடர்ந்து சாதகமான பங்கை வகிக்க சீனா தயாராக உள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.