சீன நகரை அலங்கரிக்கக்போகும் இலங்கையின் இரண்டு சிற்பங்கள்

முக்கிய செய்திகள் 3

வரலாற்றில் முதல் தடவையாக சீனாவின் செங்டு நகரை அழகுபடுத்த இலங்கை சிற்பி ஒருவரின் இரண்டு கலைப் படைப்புகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

நகரத்தை அழகுபடுத்தும் திட்டத்துக்கான வடிவமைப்புகளை சமர்ப்பிக்க 26 நாடுகளைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களை சீனா அழைத்துள்ளது. இதில் செங்டு நகரை அழகுபடுத்த ஆறு வடிவமைப்பாளர்களின் 12 வடிவமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படைப்புகளில், இலங்கை சிற்பி லலித் சேனாநாயக்கவின் இரண்டு படைப்புகளும் அடங்கும். லலித் சேனாநாயக்கவால் உருவாக்கப்பட்ட குதிரை சிற்பமும், செங்டு இரண்டு சுதந்திர பறக்கும் பறவைகள் சிற்பமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த லலித் சேனாநாயக்க, சீன நகரமொன்றில் உள்ள பிரதான பூங்காவொன்றை அலங்கரிப்பதற்கு இலங்கை கலைஞர் ஒருவரின் இரண்டு சிற்பங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை எனவும், இந்த சிலைகள் திறப்பின்போது இலங்கைக் கொடி அசைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.