மனித அபிவிருத்தி சுட்டெண் பட்டியலில் இலங்கையின் முன்னேற்றம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

உலகளாவிய மனித அபிவிருத்தி சுட்டெண் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. குறித்த பட்டியலில் இலங்கை பூச்சியம் தசம் 77 புள்ளிகளைப் பெற்று 189 நாடுகளில் 76 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டப் பிரிவு இதனை கணிக்கிறது.

1990 ஆம் ஆண்டிற்கும், 2017ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையின் மனித அபிவிருத்தி சுட்டெண் புள்ளிகள் 23 சதவீதத்திற்கு அதிகமாக வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தச் சுட்டெண்ணின் மூலம் கல்வி, சுகாதாரம், வருமானம் முதலான துறைகள் சார்ந்த தேசிய மட்ட பெறுபேறுகள் அளவிடப்படுகின்றன. குறித்த காலப்பகுதியில் இலங்கை மக்களின் ஆயுட்காலம் ஆறு ஆண்டுகளால் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த பட்டியலில் நோர்வே, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலை பெற்றுள்ளன.

Trending Posts