
அரச செலவின முகாமைத்துவத்தின் கீழ் அரசாங்க செலவினங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதாகவும், பணவீக்கத்திற்கு ஏற்ப சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றியமைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊதிய மாற்றங்கள் முதன்மை இருப்பு வரம்புகளுக்குள் செய்யப்படுகின்றன. எரிபொருள் விலை நிர்ணயம் அரசியல் அதிகாரத்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை 2018 விலை சூத்திரத்தின் படி மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. மின்கட்டணம் ஒவ்வொரு மாதமும் எதிர்கால செலவின மதிப்பீட்டை கணக்கில் கொண்டு சரி செய்யப்படுகிறது…” எனவும் தெரிவித்திருந்தார்.