பாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக  திட்ட அறிக்கையை தயாரிப்பதாக  இந்திய விமானநிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக இந்திய வௌிவிவகார அமைச்சுடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி , பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்ட அறிக்கையை தயாரிப்பதாக இந்திய விமான நிலைய அதிகார சபை குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக , காங்கேசன்துறை விமான நிலையம் மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா யோசனைகளை முன்வைத்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Posts