தனியார் பேரூந்தும் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

செய்திகள் முக்கிய செய்திகள் 3

இணைந்த நேர அட்டவணையை இதுவரையில் நடைமுறைப்படுத்தாமைக்கும், மாகாணங்களிற்கிடையிலான அரச பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்குள் வருவதை தடை செய்ய வலியுறித்தியும், அரச பேருந்துகளின் அத்து மீறிய சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் தனியார் பேருந்துகள் இன்று சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

இதனால் வவுனியாவிலிருந்து வெளி மாகாணம், மற்றும் மாவட்டங்களிற்கிடையிலான சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தரித்து விடப்பட்டன.

இணைந்த நேர அட்டவனையை உடன் நடைமுறைப்படுத்து, வெளி மாகாணங்களுக்கு செல்லும் பேருந்துகளை உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்ற பதாதைகள் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்தன.

  •  
  •  
  •  
  •  
  •  
  •